நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முற்பகல் பல கலந்துரையாடல்கள் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் நாட்டை ஒருவார காலத்திற்கு முழுமையாக முடக்கி நிலைமைகளை சுமூகமாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கலந்துரையாடல்களின் போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் இது குறித்து எவ்வித இறுதி தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments