எதிர்க்கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லை, அவர்கள் அரசிற்கு எதிரே பொங்குவதில் எவ்வித பயனுமில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளரை சந்திந்தது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் நெருக்கடியான நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன். அவர்கள் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.
அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரும் எதிர்க்கட்சியினர் ஏன் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் மௌனமாக உள்ளனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியால் தான் தீர்வு காணமுடியும்.
அரசுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும்
0 Comments