Home » » எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளும் தளர்வு!

எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளும் தளர்வு!

 


எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு, எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

இதற்கமைய, 92 ஒக்டைன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை, 84 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 338 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 95 ஒக்டைன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 373 ரூபாவாகும்.

இதுதவிர, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 113 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 289 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றிரின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.   

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |