Advertisement

Responsive Advertisement

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம் முற்றுகை! பதற்றத்தை கட்டுப்படுத்த களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்

 


தெமட்டகொடவில் உள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தை பாரவூர்தி சாரதிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  

அவர்கள் பல லொரிகளை இடையில் நிறுத்தி  தலைமைச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றிலுமாகத் தடுத்து, யாரும் தலைமைச் செயலகத்திற்குள் நுழையவோ வெளியேறவோ முடியாத வகையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments