Home » » அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!


 நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால் புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் நேற்றைய தினம் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் இம்மாதத்திற்கான சம்பளம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மேலும் தெரிவிக்கையில்,

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, பின்னர் சம்பளம் வழங்கும் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் அறிவித்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |