Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இலங்கையைவிட்டு வெளியேறத் தடை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு ஆராயப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில் பொதுமக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் அண்மையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments