( அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான டிவிசன் – 111 கடினபந்து கிரிக்கெட் போட்டியில் கல்முனை சாஹிறா தேசியக் கல்லூரி அணி 123 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான கிறிக்கட் போட்டி அண்மையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசியக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது..
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டு 50 ஓவரில் 9 விக்கட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணியினர் 37.3 ஓவர்களில் 159 ஒட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.
இப் போட்டியில் 106 பந்து வீச்சுகளுக்கு 5 சிக்ஸர்கள் 14 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 110 ஓட்டங்களைப் பெற்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வீர்ர் அஸ்மத் ஸஹி ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் விளையாட்டுத்துறை ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் றிலா , முஹம்மட் றஜீப் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான் ஆகியோரின் வழிகாட்டலில் இம் மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.
0 Comments