உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிடலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 14ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏ தலைவர் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதல் திட்டமிட்டபடி செல்லாததாலும், உலக அளவில் தனித்துவிடப்பட்டதாலும் ரஷ்ய அதிபர் புடின் மிகவும் கோபமாக உள்ளார்.
தோல்வி அடையக்கூடாத போராக உக்ரைன் போரை புடின் கருதுகிறார். பொதுமக்கள் உயிரிழப்புகள் பற்றி கவலைக்கொள்ளாமல் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தலாம்’ என அவர் எச்சரித்துள்ளார்
0 Comments