Advertisement

Responsive Advertisement

உக்ரேனில் பொறிக்குள் சிக்கியுள்ள ரஷ்யப்படைகள்!!

 


உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன் தலைநகரையோ அல்லது உக்ரேன் முழுவதையுமோ ரஷ்யப்படைகள் கைப்பற்றியவுடன் முடிந்துவிடாது என்று கூறுகின்றார்கள் சில போரியல் ஆய்வாளர்கள்.

உக்ரேனுக்கு நுழைந்துவிட்டுள்ள ரஷ்யப் படைகள் மீதான கெரில்லாத் தாக்குதல்களை உக்ரேனியப் படைகளும், மேற்குலப் படைகளும், மேற்குலகால் அமர்த்தப்படக்கூடிய கூலிப்படைகளும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றே கூறப்படுகின்றது.

உக்ரேனுக்குள் காலடியெடுத்துவைத்துள்ள ரஷ்யாவை ஒரு பொறிக்குள் சிக்கவைத்து, மற்றொரு அப்கானிஸ்தான் அனுபவத்தை ரஷ்யாவுக்கு வழங்கும் திட்டத்தில் மேற்குலகம் செயற்பட்டு வருவதாகவே தெரிகின்றது.

ஊடகங்களில் வெளியாகிவருகின்ற காட்சிகளை அடிப்படையாகவைத்து பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:

Post a Comment

0 Comments