Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிரடியாக களமிறக்கப்பட்ட இராணுவம்

 


எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால், அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.


இதுவரை எரிபொருள் வரிசையில் நின்று மூன்று பேரும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் இரு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments