Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது ! வாள் மீட்பு


 மட்டக்களப்பு தலைமை பொலிஸ்  பிரிவிலுள்ள  நாவற்கேணி சந்தியில் இரு குழுக்களுக்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தலைமறைவாகிய இருந்து வந்துள்ள இருவரை நேற்று செவ்வாய்கிழமை (23) கைது செய்ததையடுத்து இதுவரை 4 பேர் கைது 2 கத்தி ஒருவாள் மீட்;கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கி இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவரை கைது செய்துள்ளதுடன் இரு கத்திகளை மீட்டனர்.

 இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகிவந்த நிலையில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் வாளுடன் சரணடைந்ததையடுத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments