Advertisement

Responsive Advertisement

மரதன்கடவல மண் டிப்பர்-கார் விபத்தில் காரில் பயணித்த இருவர் மரணம்!



( அஸ்ஹர் இப்றாஹிம்)

இன்று காலை திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளார்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவப்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காருமே   மரதன்கடவல பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

திருகோணமலை அன்புவழிபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய பங்குத்தந்தையும், திருகோணமலை எகெட் கரிற்றாஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமான அருட்தந்தை. ஜி .நிதிதாசன் அடிகளார் மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments