றம்ஸீன் முஹம்மட்)
அக்கரைப்பற்றிலிருந்து வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு சுற்றுலா சென்ற குழுவில் இருந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களானஅப்துல் ஹசீன் ஹயான் , அமீன் நிஹாம் ஆகிய இருவரும் நீர் வீழ்ச்சியில் இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மேலும் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மொனராகல வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்த்து.
இவ்விடயம் சம்பந்தமாக வெல்லவாய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் சம்பந்தமாக வெல்லவாய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments