Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்றவருக்கு ஏற்பட்டுள்ள சோகம்!

 


மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்த நேரத்தில், வரிசையில் நின்ற வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி வத்தேகம – உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதான மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி – எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்காக காத்திருந்த குறித்த நபர், திடீரென கீழே வீழ்ந்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்த சிலர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments