அஸ்ஹர் இப்றாஹிம்
விளையாட்டு அமைச்சினால் அம்பாறை உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற மாவட்ட மட்ட பூப்பந்தாட்ட ( Badminton) சுற்றுப்போட்டியில் நிந்தவூர் பிரதேச செயலக அணி அம்பாறை மாவட்ட சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் சார்பாக கலந்து கொண்ட பூப்பந்தாட்ட அணித் தலைவர் கே.எம்.சஸ்பி , எம்.ரீ.உஸாமா , இம்ரி மகாரிம் , ஏ.எம்.சாலிக் , நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழக மற்றும் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக வீரர்களின் பங்களிப்பு இவ்வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது.
0 Comments