Home » » 2022 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட தேசிய இளையோர் செஸ் சம்பியன்சிப் போட்டிகள்

2022 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட தேசிய இளையோர் செஸ் சம்பியன்சிப் போட்டிகள்

 



( அஸ்ஹர் இப்றாஹிம்)

2022 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட தேசிய இளையோர் செஸ் சம்பியன்சிப் போட்டிகள் இம்மாதம் 19 , 20 ஆம் திகதிகளில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

10 வயதின் கீழ் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் பிறந்த பெண்கள் , 12 வயதின் கீழ் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின் பிறந்த ஆண் , பெண் இருபாலாருக்குமான திறந்த போட்டி , 14 வயதின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பின் பிறந்த பெண்கள் போன்ற நிகழ்சித் திட்டத்தின் கீழ் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

போட்டியில் பங்டகேற்கவுள்ள வீர வீராங்கனைகள் ஏ.எம்.ஸாகிர் அஹமட் ( 0776665191 ) உடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |