( அஸ்ஹர் இப்றாஹிம்)
சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் எனும் அமைப்பினுடைய அம்பாறை மாவட்ட மத நல்லிணக்க குழு பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு" போதைவஸ்துக் கெதிரான ஆரோக்கியமான இளையோர் சமூகத்தை உருவாக்குவோம்" எனும் தலைப்பிலான நிகழ்வில் போதையற்றபாடசாலை எனும் தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 13 ) ஒலுவில் அல் ஹம்ரா மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.
வளவாளராக மனூஸ் அபுபக்கர் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஓய்வு பெற்ற சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் வஸீர்டீன் , டாக்டர் அலாவூத்தீன், பாடசாலை அதிபர் யு.கே.அப்துல் ரஹீம் ( நளிமீ ) மற்றும் இணைப்பாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments