Advertisement

Responsive Advertisement

மீண்டும் உலகை மிரட்ட வந்தது புதிய வைரஸ்

 


டெல்டக்ரோன்” என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.


அது டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் இதனை உறுதிசெய்தார்.

அந்த வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வைரஸ் வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்று அமைப்பு கூறியது.

தற்போது சில பாதிப்புகள் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அதனுடன் தொடர்புடைய சுமார் 30 சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

Post a Comment

0 Comments