Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான மின்விசிறிகள் அன்பளிப்பு



( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருதுதைச் சேர்ந்த ஓய்வு பெற்ற  மர்ஹூம் ஏ.எம்.மீராசாஹிப் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின்  புதல்வர் பொறியியலாளர் மொஹமட் மைஸான்  சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு  ஏறத்தாள  ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான மின்விசிறிகளை அன்பளிப்பு செய்துள்ளார்.

ஆசிரியராகவும், கல்முனைக் கல்விக் காரியாலய நலன்புரி உத்தியோகத்தராகவும் , அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய ஆணையாளராகவும்  கடமையாற்றி காலஞ்சென்ற  மர்ஹூம் ஏ.எம்.மீராசாஹிப் அவர்களின் ஞாபகார்த்தமாவே இவை வழங்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை விடுத்த வேண்டுகோளை அடுத்தே இவ் அன்பளிப்பு கிடைக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments