Home » » தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக பதிவாளர் ஜௌபர் சாதிக் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக பதிவாளர் ஜௌபர் சாதிக் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிப்பு



( அஸ்ஹர் இப்றாஹிம்)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா அதன் ஒலுவில் வளபகத்தில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்றது.

இறுதி நாளான வியாளக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக பதிவாளர் ஜௌபர் சாதிக் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபுபக்கர் அவர்களினால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சம்மாந்துறையை பிறப்பிடமாக்க் கொண்ட ஜௌபர் சாதிக் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீட உயர்தர இரண்டாம் வகுப்பில் சித்தியடைந்து பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கு நல்லாசிரியராகவிருந்து பலரை பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளார்.

1979 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் போதனாசிரியராக கடமையாற்றி 1081 முதல் 1984 வரை பட்டதாரி ஆசிரியராக அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.

இந்த காலப்பகுதியில் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி வருகைதரும் போதனாசிரியராகவும் செயற்பட்ட இவர் கிழக்கு பல்கலைக்கழகம் , திறந்த பல்கலைக்கழகம் முதலானவற்றில் பகுதிநேர , முழுநேர வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். சிறிது காலத்தின் பின்னர் ஆசிரியத் தொழிலிருந்து விலகி கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி பதிவாளராக நியமனம் பெற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உதவி பதிவாளராகவும் , மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட உதவிப் பதிவாளராகவும் பதவி உயர்வு பெற்று , 1995 ஆண்டில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஸ்தாபக பதிவாளராகவும் கடமையாற்றி பல்வேறு நிர்வாகத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது ஓய்வு நிலையை அடைந்துள்ளார்.

 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |