Advertisement

Responsive Advertisement

காத்தான்குடி நகரசபையின் முன்மாதிரி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா



( றம்ஸீன் முஹம்மட்)

காத்தான்குடி நகரசபையின் முன்மாதிரி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா 2021 கடந்த சனிக்கிழமை நகரசபையின் செயலாளர் திருமதி எம்.ஆர்.பாத்திமா றிப்கா ஷபீன் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரமுதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். அஸ்பர் பிரதம அதிதியாகவும்,
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எல்.நஸீர்தீன் ,காத்தான்குடி தள  வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் ,காத்தான்குடி நகரசபையின் கணக்காளர்  ஏ.எஸ்.. மனாசிர் அஹ்ஸன்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ,  காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான
கே.எல்.எம்.பரீட் ,  எம்.எல்.எம்.சல்மா அமீர் ஹம்ஸா  ,ஏ.எம்.. பஹ்மியா ஏ.எல்.உம்மு  பஜ்ரியா ,   ஏ.எச்.ஜெம்ஹுத் நிஸா  ,பீ.எம்.அமீர் அலி  ,ஏ.எல்.. தீன் பைரூஸ் , காத்தான்குடி நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர்  எம்.ஐ.எம்.நியாஸ்  , காத்தான்குடி நகரசபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோஸ்தர்  எம்.எஸ்.பஸீர் அஹமட் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் நகரசபை உத்தியோகத்தர்கள் , பெற்றோர்கள்  ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாலர்பாடசாலையில் முன்பள்ளி கற்கையைப் பூர்த்தி செய்தமைக்காக 32 மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாலர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேறின

Post a Comment

0 Comments