( ஸ்ஹர் இப்றாஹிம்)
கொவிற் 19 தொற்று காரணமாக முழு உலகமுமே முடங்கி கிடந்த சந்தர்ப்பத்தில் உலகம் முழுவதிற்குமான தடுப்பூசியின் தேவை உணரப்பட்டது. அந்தவகையில் கொவிற் 19 பெருந்தொற்றிற்கான தடுப்பூசியானது இலங்கையில் செலுத்தப்பட்டு அண்மையில் ஒரு வருடம் பூர்த்தியானதையிட்டு சுகாதார அமைச்சினால் தேசிய நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வானது சர்வமத பிரார்த்தனைகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக துரிதமாகவும் வினைத்திறனாகவும் செயற்பட்டமைக்காக தெரிவு செய்யப்பட்ட சுகாதார திணைக்கள மற்றும் பிரதேச செயலாளர்களுக்கான சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வவுனியா மாவட்ட சுகாதார பணிமனையின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் , முல்லைத்திவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான . காதர் மஸ்தான் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சுகாதார சேவை பணிப்பாளர், வைத்தியர்கள்,தாதியர், திணைக்கள தலைவர்கள்,பாதுகாப்பு படை பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments