Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்



( அஸ்ஹர் இப்றாஹிம்)

2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மடு பிரதேச செயலாளர் கே.நிஜாகரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற   உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான  காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மடு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேசவாரியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் கடந்த வருடம் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம்,உள்ளூராட்சி மன்றங்கள்,விவசாயம், கால்நடை,  கல்வி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் ,வீதி அபிவிருத்தி,  சமூர்த்தி, நீர்பாசனம்,வனவளம் சம்பந்தமான கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன், .சார்ள்ஸ் நிர்மலநாதன்,  விணோ நாகரதலிங்கம், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு  அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments