Home » » கிழக்கு மாகாணத்திலிருந்து இலங்கை கிறிக்கட் தேசிய அணிக்கு ஒருவரையாவது அனுப்புவதே எமது இலக்கு

கிழக்கு மாகாணத்திலிருந்து இலங்கை கிறிக்கட் தேசிய அணிக்கு ஒருவரையாவது அனுப்புவதே எமது இலக்கு




அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் தலைவர் இந்திக நளின் ஜயவிக்ரம தெரிவிப்பு

(  அஸ்ஹர் இப்றாஹிம்)

நற்பண்புடைய மாணவர்களை உருவாக்குவதற்கு விளையாட்டுத்துறையின் பங்கும் மிகவும் அவசியமாகும்.
ஒவ்வொரு பிள்ளையிடத்தும் நன்மனப்பாங்குகளை ஏற்படுத்துவதில் விளையாட்டுத்துறை  முதன்மை பெறுகின்றது.  நற்பண்புள்ள மாணவர் சமுதாயத்தினை உருவாக்குவதற்கு விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட வேணடும்.
இவ்வாறு கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் 25 வருட புர்த்தி வெள்ளிவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கிறிக்கட சம்மேளனத்தின் தலைவர் இந்திக நளின் ஜயவிக்ரம தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்று எமது நாட்டிலுள்ள பெற்றோர் கல்விக்கு கொடுக்கும் அந்தஸ்த்து மற்றும் முக்கியத்துவம் விளையாட்டுத்துறைக்கு கொடுப்பதில்லை. அம்பாறை மாவட்டத்தின் கிராமப் புறங்களில் மிகவும் திறமைவாய்ந்த கிறிக்கட் விளையாட்டு வீர்ர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இலைமறை காயாக இருந்து விட்டு வேறு தொழில்களுக்கு சென்று விடுகின்றனர். ஒரு விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக செயற்படுவதில்லை. பல்வேறு காரணங்களுக்காக இடையில் கலைந்து விடுகின்றன. ஆனால் கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகம் 25 வருடங்களைத் தாண்டி கடினபந்து கிறிக்கட் துறையிலும் , ஏனைய சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் எதை நோக்கி செல்ல வேண்டும் என்ற இலக்கும் இருக்கும்.அந்த முயற்சி சார்ந்த பயிற்சியும் , தனது இலக்கை நோக்கி பயணிக்க வைக்கின்றது.  தன்னம்பிக்கை , நேர்வழியில் செல்தல் ஆகியவற்றையும் கற்றுத் தந்து வெற்றியாக இலக்கை அடைகின்றது.
போட்டியொன்றில் தோல்வியடையும் போது துவண்டு விடாமல் இதுவொரு பாடமாக கருதி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
இன்று திறமையான சில கிறிக்கட் வீர்ர்கள் உள்ளுரிலேயே தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனம் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றது. இத் திறமைசாலிகளுக்கு மேலதிக பயிற்சினை வழங்கி கிழக்கு மாகாணத்திலிருந்து தேசிய கிறிக்கட் அணிக்கு எதிர்காலத்தில் கிறிக்கட் வீர்ர்களை அனுப்புவதே எமது பிரதான இலக்காகும்.
எனத் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |