உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதனால், உக்ரைன் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
பலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மோல்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு, உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ரஷியா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மோல்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments