Advertisement

Responsive Advertisement

ஒமிக்ரோனுடன், கொவிட் முடிவடைகின்றதா?

 


ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் தொற்று முடிவடையும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.


ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் வைரஸ் நிலைமை முடிவுக்குவரும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரும்பாலான நாடுகளில் சுகாதார நடைமுறைகளை இலகுப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சுகாதார நடைமுறைகள் இலகுவாக்கப்பட்டதை அடுத்து, பெரும்பாலான நாடுகளில் கொவிட் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான ஒரு நிலைமை இதுவரை உறுதிப்படுத்தப்படாமையினால், சுகாதார நடைமுறைகளை இலகுப்படுத்த முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், கொவிட் நிலைமையை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு காலம் விரைவில் வரும் என நம்புவதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

0 Comments