Advertisement

Responsive Advertisement

கிழக்குப்பல்கலைக்கழக விவசாய பீட பழையமாணவர் ஒன்றியத்தின் விசேட அங்குரார்ப்பண பொதுக்கூட்டம்


 கிழக்குப்பல்கலைக்கழக விவசாய பீட பழையமாணவர்களை ஒன்றிணைக்குமுகமாக விசேட அங்குரார்ப்பண பொதுக்கூட்டம் எதிர்வரும் 26ந் திகதி பெப்ரவரி மாதம் பிற்பகல் 4.00 மணியளவில் இணையவழி (online - நிகழ்நிலை) மூலம் இடம்பெறவுள்ளது.


அன்றையதினம் புதிய நிர்வாகசபை தெரிவு, எதிர்கால நிகழ்வுகள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதால் கிழக்குப்பல்கலைக்கழக விவசாய பீட பழைய மாணவர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாது பங்குபெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

விவசாய பீட பழைய மாணவர்கள்
அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்குவதோடு தங்களது பதிவை
உறுதிப்படுத்த 071 - 8080 118 (Dr.எம்.சுகிர்தரன்) எனும் தொலைபேசி/வாட்ஸ்அப் இலக்கத்துக்கு குறும்செய்தி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர் .

கிழக்குப் பல்கலைக்கழக, விவசாயபீடத்தின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டுக்குழுவினர்

Post a Comment

0 Comments