அஸ்ஹர் இப்றாஹிம்
இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுருத்தி நாடு தழுவிய தனி நபர் சைக்கிளோட்டத்தை எட்டு நாட்களாக 1407 கிலோ மீட்டர் ஓடி வெற்றிகரமாக நிறைவு செய்த சாதனை வீரர் பொத்துவிலைச் சேர்ந்த சுல்பிகார் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஜே.ஜே.பௌண்டேஷன் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை மாலை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம் பெற்றது. பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான அல் ஹாஜ் யூ.எல்.யாக்கூப், ஒலிபரப்பாளர்களான சட்டத்தரனி ஏ.யெம்.தாஜ், இர்ஷாத் ஏ காதர்,ஊடகவியலாளர்களான அஸ்ரப் ஏ சமத்,இர்ஷாத், ஏ.எஸ்.எம்.ஜாவித்,ஹிதாயா நௌபல்,வஜீஸாத் வஹாப்தீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சாதனை வீரர் சுல்பிகாருக்கு ஜே.ஜே.பௌண்டேஷனின் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான டொக்டர் அல் ஹாஜ் ஐ.வை.எம்.அனீப் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
0 comments: