Advertisement

Responsive Advertisement

சைக்கிளோட்ட வீரர் பொத்துவில் சுல்பிகாருக்கு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கல்வி சமூகம் பெரும் வரவேற்பு.



எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்


இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய தனி நபர் சைக்கிளோட்டம்
அண்மையில் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை பொத்துவிலை சேர்ந்த‌ சுல்பிகார்  ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் ஆர‌ம்பித்தார்.
இந்த‌ சைக்கிள் சவாரி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, க‌ல்முனை, பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை வ‌ந்த‌டையுள்ளது.
இன்று மாலை சாய்ந்தமருதை சென்றடைந்த வேளையிலேயே
இந்த நிகழ்வின் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் , சாய்ந்தமருது கோட்ட கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக் , அல் ஹிலால் அதிபர் யு.எல்.நஸார் உட்ப‌ட‌ ப‌லரும் க‌ல‌ந்து சிற‌ப்பித்த‌ன‌ர்.

Post a Comment

0 Comments