யு.கே.காலிதீன் , அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க ஏற்பாட்டில்,
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் வைத்தியாசாலை உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று
திறந்தவெளி கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர்.ஏ.ஆர்.எம்.தௌபீக் பிரதம அதிதியாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க பிரதித் தலைவரும், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்க தலைவரும், இளம் வர்த்தகருக்கான கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முபாறக் டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் தவிசாளருமான அல்ஹாஜ்.எம்.எஸ்.எம்.முபாறக்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள், பிராந்திய மருந்தாளர் திருமதி.எஸ்.இந்திரகுமார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.சுபராஜன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கணக்காளர் திருமதி.எம்.எம்.உசைனா பாரிஸ்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் உயிர் மருத்துவ பொறியியலாளர், எந்திரி.ஆர்.ரவிச்சந்திரன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் தர முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்.பி.ஜி.பி.டேனியல்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்.எம்.சி.எம்.மாஹிர்
கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர். எம்.பி.அப்துல் வாஜித்
தற்போதைய சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை முன்னர் சுற்றயல் கூறாக இருந்தபோது அதன் பொறுப்பதிகாரியாக இருந்து இவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதில் முன்னின்று உழைத்த இப்பிரதேசத்தின் சிரேஷ்ட வைத்தியர் டொக்டர்.அல்ஹாஜ்.ஏ.எல்.எம்.ஜமீ
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் தொற்றா நோய்க கிளினிக் சேவைகளை பொதுமக்களின் வசதி கருதி நடமாடும் சேவையாக முன்னெடுக்க பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி இவ்வைத்தியாசாலையின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். யூ.எல்.எம்.நியாஸ்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்காக இரவு பகல் பாராது உழைத்துவரும் இப்பிரதேச மக்களின் மனங்களில் தனக்கென தனியொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க தலைவரும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியுமான டொக்டர். எம்.எச்.சனுஸ் காரியப்பர்
உள்ளிட்ட வைத்தியசாலை உத்
தியோஸ்தர்களும் ஊழியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
0 Comments