இதுவரையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று விண்ணப்பிக்க முடியுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன (L.M.T. Dharmasena) தெரிவித்துள்ளாா்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிகழ்நிலை முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான ´Exams Sri Lanka´ (Android | iOS) ஊடாக, அறிவுறுத்தல்களை பின்பற்றி இதற்காக விண்ணப்பிக்கலாம்.
பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர்கள் அறிவுறுத்தியவாறு சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதியிலிருந்து யூன் மாதம் முதலாம் திகதி வரை பரீட்சை இடம் பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளாா்.
0 Comments