Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மின்னொளி கிறிக்கட் போட்டியில் சாய்ந்தமருது ஈஸ்டன் பேள்ஸ் அணி சம்பியனாகியது.

( றம்ஸீன் முஹம்மட்) 



அக்கரைப்பற்றின் முன்னணி கழகங்களில் ஒன்றான ஹிஜ்றா விளையாட்டு கழகம் மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்து நடாத்திய மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது மண்ணை பிரதிநிதித்துப்படுத்தி கலந்து கொண்ட  ஈஸ்டன் பேர்ள்ஸ்  விளையாட்டு கழகம் இச்சுற்றுத்தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக ஆடி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது .
அம்பாறை மாவட்டத்தின்  மிகப் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய சாய்ந்தமருது ஈஸ்டன் பேள்ஸ் விளையாட்டுக் கழகம் இறுதியாட்டத்தில் சம்மாந்துறை  ஈஸ்டன் சலஞ்சேர்ஸ் அணியிரை வீழ்த்தி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது..

அக்கரைப்பற்று அதாவுல்லா மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கு சம்பியன் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments