இந்த வாரத்தில் மேலும் 5 கப்பல் எரிபொருட்கள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும், அந்த வகையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றும் தொடர்ந்து வரும் நாட்களிலும் 5 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன.
டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருளை தாங்கிய கப்பல்களே அவையாகும்.
அதற்கிணங்க எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பேச்சுக்கு இடமில்லை.
நாட்டின் எரிபொருள் தேவை 6000 மெட்ரிக் தொன்னாக உள்ளதுடன் தற்போது எரிபொருளுக்கான கேள்வி வெகுவாக அதிகரித்துள்ளது. அதற்கிணங்க தற்போது 9000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படுகின்றது என்றார்.
0 Comments