மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் பலசரக்கு கடை ஒன்றில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கடை முதலாளி ஒருவரை, கேரளா கஞ்சாவுடன் திங்கட்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர், ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள குறித்த பலசரக்கு கடையை முற்றுகையிட்டனர்.
இதன்போது கடை முதலாளி, தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த 1,700 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன், அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 53 வயதுடையவர் எனவும் இவர் நீண்ட காலமாக கடையில் கஞ்ச வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொஸிஸார் தெரிவித்தனர்.
0 Comments