க.பொ.த உயர்தரப் பரீட்சை மார்ச் 5 ஆம் திகதி முடியும் வரை மின்வெட்டை தவிர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.
அறிவிக்கப்பட்ட கால அட்டவணையை மீறி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட முடியும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டை தவிர்ப்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் கல்வி அமைச்சு, மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியோருடன் நேற்று (22) இரவு கலந்துரையாடல் இடம்பெற்றதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
0 Comments