க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தாயார் மற்றும் தந்தை பணி நிமித்தம் அலுவலகத்திற்கு சென்ற சமயத்தில் கடந்த திங்கட்கிழமை 20 வயதான மகன் தனது வீட்டுக்கு அருகில் வாழும் இளம் குடும்பப் பெண்ணுடன் தனது வீட்டு படுக்கை அறையில் காதலர் தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில் அதனை அறித்து அங்கு விரைந்து வந்த தாய் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் யாழ் நாவலர் வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், 27 வயதான பெண்ணை இளைஞனின் தாயார் தாக்கியதில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கண் முற்றாகப் பாதிக்கும் நிலையில் உள்ளதாக தனியார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகனுக்கும் தோள்மூட்டு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயம் ஏற்பட்டு மற்றுமொரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த பகுதியைச் சேர்ந்த அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டாவது தடவையாக எழுதிக் கொண்டிருக்கும் இளைஞன் ஒருவரே இவ்வாறு தாயாரால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
0 comments: