நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் மே மாதத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில வாகனங்களுக்கான டயர்களுக்கு தட்டுபாடு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
டயர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதை முன்னிலைப்படுத்தி, சில வர்த்தகர்கள் டயர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாபியா ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக ஆசிய டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் சுமார் 83 லட்சத்து 31 ஆயிரம் வாகனங்கள் காணப்படுகின்ற நிலையில், வருடாந்தம் 31 லட்சத்து 18 ஆயிரத்து 500 டயர்கள் தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் 18 லட்சத்து 50 ஆயிரம் டயர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதுடன், சுமார் 12 லட்சத்து 63 ஆயிரத்து 500 டயர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
எவ்வாறாயினும், நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக, இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக டயர் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments: