Advertisement

Responsive Advertisement

ஏறாவுர் பிரதேசத்தில் ஆடு களவெடுத்த கள்ளர்கள் மூவர் ஊர் மக்களால் துரத்திப் பிடித்தனர். ஆடுகளும் மீட்பு


( அஸ்ஹர் இப்றாஹிம்)


கருப்பு நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் ஏறாவூர் சதாம் ஹுசைன்  கிராமத்தில் பிரதான வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த  ஆட்டை பிடித்து  அதனை ஏற்றிச்சென்றனர்.
இச் சம்பவத்தை அவதானித்துக் கொண்டிருந்த சிலர் கூச்சலிட தொடங்கினார்கள். செய்வதறியாது தடுமாறிய ஆட்டு கள்ளர்கள் அங்கிருந்து தப்பியோட முற்பட்ட போது மீராகேணி போதை ஒழிப்பு அணியால் துரத்திச் சென்று  மைலம்பாவெளியில்  வைத்து பிடித்து கள்ளர்களை மடக்கிப்பிடித்ததுடன்  ஆட்டையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு இப்பிரதேசத்தில் கட்டாக்காலியாக மேயும் பல ஆடுகள் இல்லாமல் போனதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments