Advertisement

Responsive Advertisement

காலஞ்சென்ற இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிரேஸ்ட புலனாய்வு அதிகாரி கமல் லியனாராய்ச்சியின் திடீர் மறைவு ஊடகத்துறைக்கு பாரிய இழப்பாகும்

.


இலங்கை சமாதான ஊடக அமைப்பின் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் அனுதாபம்..

அஸ்ஹர் இப்றாஹிம்)         

ஊடகத்துறையில் பல அனுபவங்களைப்பெற்று , 2006 ஆம் ஆண்டு முதல் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள மொழிப்பிரிவு பொறுப்பதிகாரியாகவும்  ஊடகவளவாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றி பின்னர் ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகவும் பதவியுயர்வு பெற்றிருந்தார்.
நீதி என்ற சிங்கள வார இதழ் மூலம் ஊடகத்துறைக்குள் கால்பதித்த கமல் லியனாராய்ச்சி , சுமார் 30 ஆண்டுகால ஊடகத்துறை அனுபவம் கொண்டவராவார்.
ஆங்கில் மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற இவர் யுக்திய மற்றும் லக்பிம நாளிதழ்களின் சிரேஸ்ட ஊடகவியலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
அன்னாரின் மறைவு உடகத்துறைக்கு ஈடுசெய்ய முடியபா பெரும் இழப்பாகும். என தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments