Home » » மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் ! அமைச்சர் மகன் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் ! அமைச்சர் அருந்திக பதவி விலகுவதாக தெரிவிப்பு

மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் ! அமைச்சர் மகன் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் ! அமைச்சர் அருந்திக பதவி விலகுவதாக தெரிவிப்பு

 


ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (03) வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

குறித்த சம்பவம் தொடடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகனான, 23 வயதான அச்சிந்த ரன்தில ஜெஹான் பெனாண்டோ நேற்றிரவு பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

அத்துடன் இத்தாக்குதல் சம்பவத்திற்காக பயன்படுத்திய BMW வகை கார் ஒன்றை களுபோவில பிரதேசத்தில் வைத்து ராகமை பொலிசார் மீட்டிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகமை மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை தமது பதவியை இராஜினாமா செய்வதாக, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |