Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் கௌரவ நிதியமைச்சர் பெஸீல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான மற்றுமொரு அபிவிருத்தித்திட்டம்



( தாரிக் ஹஸன்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் கௌரவ நிதியமைச்சர் பெஸீல் ராஜபக்ஷ  அவர்களின் எண்ணக்கருவில் உருவான மற்றுமொரு அபிவிருத்தித்திட்டமான நாட்டின் சகல பிரதேச செயலகங்களுக்குமான உணவுப்பாதுகாப்பு-புதிய வருமான வழிகள் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி உட்பட மேலும் பல்வேறு பயன்களுடன்  "ஒரு இலட்சம் பணிகள்" நிந்தவூர் 11ம் பிரிவிற்கான  அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8:52 சுபவேளையில்  நிந்தவூர் ஜன்னாஹ் பள்ளிவாசலில் ஆரம்பித்து வைக்கப்பட்டு மரக்கன்றும் நாட்டப்பட்டது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப் அவர்களது வழிகாட்டலில், பிரதேச செயலக  திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐனுல் ஜாரியா அவர்களினது நெறிப்படுத்தலிலும் மேற்படி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜன்னாஹ் பள்ளி தலைவர் முன்னாள் அதிபர். ஏ.எம். பாறுக், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், நிந்தவூர் இளைஞர் அமைப்பாளர்  சுலைமான் ஸாபி  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐனுல் ஜாரியா மற்றும் பயனாளிகள், பொதுமக்கள், ஜன்னாஹ் பள்ளி நிருவாகத்தினர் மற்றும் நலன் விரும்பிகளும் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments