தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், கரணவாய், மண்டான் பகுதியைச் சேர்ந்த மிதுனராஜ் மிதுனா (வயது- 29) எனத் தெரிய வருகிறது.
குறித்த பெண் கடந்த 6ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக் காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிய வருகின்றது.
0 comments: