கண்ணீரால்_அஞ்சலிப்போம்!
ஆஞ்சநேயர் என்றால் மட்டக்களப்பில் தெரியாதவர் எவருமில்லை!
அன்பு கருணை ஆற்றல் எப்போதும் கொண்ட நல்ல மனிதர்!
அன்பாளர் சண்முகராசா ஆகுதியானார் அஞ்சலி செலுத்துவோம்!
யாழ்மண்ணில் அவதரித்து மட்டக்களப்பு மண்ணில் திருமணம் செய்தவர்!
பற்றுள்ள தமிழர் பலரின் வாழ்வுக்கு ஒளியூட்டிய வர்த்தகர்!
தொழில் அதிபராக தொந்தரவு இன்றி சேவையாற்றிய புனிதர்!
ஆன்மீகத்தில் அளவற்ற பக்தன் அதனால் ஆஞ்சநேயர் ஆலயம் தந்தார்!
அரசடி மணிக்கூட்டு கோபுரத்தை அலங்கரித்த பெரியார்!
ஆடைத்தொழில் சாலையில் அநேகருக்கு வேலை வழங்கியவர்!
சிறுவர் பூங்காவை நவீனமுறையில் அமைத்து குழந்தைகளை மகிழ்வித்தவர்!
கள்ளியங்காடு சேமக்காலை வீதியின் பெயரை ஆலய வீதியாக மாற்றியவர்!
கண்ணியமாக பழகுவதில் காருண்யம் கொண்ட உத்தமர்!
இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாநாடு நடந்த வேளையில்!
இல்லை என்று சொல்லாமல் இயன்ற பேருதவிகளை வழங்கியவர்!
எங்களை விட்டு இறையடிசேர்ந்தமையால் கண்ணீரால் அஞ்சலிப்போம்!
-அம்பிளாந்துறையூர் அரியம்-
0 Comments