சிறிலங்காவின் மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடியை விடவும் இரட்டிப்பு மடங்கு நிதி மோசடி இடம்பெறக்கூடிய வீதி நிர்மானப் பணி திட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் ரம்புக்கன வரையிலான இருபது கிலோ மீற்றர் வீதி நிர்மானிக்கப்பட்டால் அதன் ஊடாக 16440 கோடி ரூபா பண மோசடி இடம்பெறும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த 20 கிலோ மீற்றர் வீதியை நிர்மானித்தால் அதற்கான செலவு தாமரை கோபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானிக்க செலவான பணம் செலவாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த வீதியை நிர்மானிப்பதற்கு சீன நிறுவனமொன்று 1050 மில்லியன் டொலர் தேவை என கோரியிருந்த போதிலும் உள்நாட்டு நிறுவனமொன்று அதற்கான செலவாக 1872 மில்லியன் டொலர் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளது.
எனினும் சீன நிறுவனத்திற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் உள்நாட்டு நிறுவனத்திற்கு சந்தர்ப்பம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு கூடுதல் தொகைக்கு வீதி நிர்மானிக்க அனுமதி வழங்குவதனால் சுமார் 16440 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு பெற்றுக் கொள்ளும் நோக்கில் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவையை பிழையாக வழிநடத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments