( தாரிக் ஹஸன்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு – நிந்தவர் பிரதான வீதியில் வெட்டுவாய்க்காலுக்கு அருகில் இன்று நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதும் தாம் பயணித்த கார், மோட்டார் சைக்கிளை ஆகியவற்றை கைவிட்டு விட்டு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.!
அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி கார் ஒன்றில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் பயணித்துக்கொண்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து அவர்களை கைது செய்யும் பொருட்டே பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர்
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டோர் பயணித்ததாக கருதப்படும் கார் இலக்காகி உள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபர்களும் அவ்விடத்தில் வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளனர்
இதன்போது சந்தேக நபர்களால் பொலிசார் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பிரதான சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். காயமடைந்த பிரதான சந்தேகநபர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வண்டியில் மறைந்திருந்த இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்தைச் சுற்றி வளைத்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்

0 Comments