Advertisement

Responsive Advertisement

ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் 7 விக்கட்டுக்களினால் வெற்றி




( அப்துல் பாஸித் )

ஓட்டமாவடி  வளர்பிறை  விளையாட்டுக் கழகத்திற்கும்  நியு ஸ்டார்  விளையாட்டுக்  கழகத்திற்கும்  இடையிலான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேக  புர்வகடினபந்து கிறிக்கட் போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை  விளையாட்டுக் கழகம் 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

 ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு  மைதானத்தில்  அண்மையில்  இடம்பெற்ற  மேற்படி கிறிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியு ஸ்டார் விளையாட்டுக்கழகம் 17.4  ஓவர்களில் சகல  விக்கட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது

.பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய  ஓட்டமாவடிவளர்பிறை  விளையாட்டுக் கழகத்தினர் 11 ஓவர்களில்  92  ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்டுக்களினால் வெற்றியை தமதாக்கிக்கொண்டனர்.
 ஓட்டமாவடிவளர்பிறை  விளையாட்டுக்கழகத்தின் சார்பில் அஸ்பாக் அஹமட் 19 பந்துவீச்சுக்களுக்கு 38  ஓட்டங்களையும் முஹமட் றிகாஸ் 28 பந்து வீச்சுக்களில் 35 ஓட்டங்களையும் பெற்று கழகத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தனர்.

Post a Comment

0 Comments