Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்பு அங்குரார்ப்பண நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்

நிந்தவூர் அல்-பர்ஹான் சன சமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவ மாணவியர்களுக்கான இலவச வகுப்பு அங்குரார்ப்பண  நிகழ்வும் மாணவர் விருத்தி வேலைத்திட்டமும் நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின்  தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களும் கௌரவ அதிதியாக பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எல்.ரியாஸ் ஆதம் ,பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் அல்-பர்ஹான் சன சமூக நிலையத்தின்  தலைவர், செயலாளர், உறுப்பினர் மற்றும்  மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments