எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை அச்சக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த தேசிய அச்சக மகாநாடு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எச் ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.
இலங்கை அச்சக சம்மேளன தலைவர் பீற்றர் டெக்கர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஜே.டீ.சி அச்சு தொழில்நுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்துல பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை அச்சக சம்மேளனத்தின் முதலாவது பிரதி தலைவர் விராஜ் ஜயசூரிய , முன்னாள் தலைவர் டெலான் சில்வா, பொதுச் செயலாளர் எம்.செந்தில் நாதன் , பொருளாளர் செல்வம் கேதிஸ் ஆகியோர் முன்னிலை படுத்தப்பட்டிருந்தனர்.
இம்மாநாட்டில் தேசிய ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் அச்சுக்கலை துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப ரீதியிலான தொழில்பாடு ரீதியாக விளக்கமளிக்கப்பட்டது.
0 Comments