( றம்ஸீன் முஹம்மட்)
சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த எட்டாவது (08) தொகுதி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு சலேன்ஸ் வின்ஸ் கல்லூரியின் தவிசாளர் முஸ்தபா முபாறக் தலைமையில் கடந்த சனிக்கிழமை கல்லூரியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகத்தரும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் ஏ.சீ. றியாஸ், சிறப்பு அதிதியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் முகம்மது றியாத் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
0 Comments