( றம்ஸீன் முஹம்மட்)
திருகோணமலை முள்ளிப்பொத்தானை வைத்தியசாலையில் உலக வங்கியின் அனுசரணையுடன் இடம்பெறும் Primary Care System Strengthening Project (PSSP) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் முள்ளிப்பொத்தானை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இத்திட்டத்தின் மூலம் சுகதேகியான 35 வயதுக்கு மேற்பட்ட நபரது ,உடல் திணிவு சுட்டெண் , இரத்த அழுத்தம் , உபவாச இரத்தப்பரிசோதனை , சிறுநீர் பரிசோதனை , சிறுநீரகப் பரிசோதனை , இரத்தத்தில் கொழுப்பின் விபரம் , ஹீமோகுளோபின் பரிசோதனை , வாய் பரிசோதனை , இதயம் ,நுரையீரல் ,வயிற்று பரிசோதனை என்பன கிரமமான முறையில் இலவசமாக பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன...
முள்ளிப்பொத்தானை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் தாரணி அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் . பிரேமானந்த் , தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ. ஸ்ரீபதி, தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். மலர்விழி, தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் .ஜீவராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் சிராஜ் நகர், முள்ளிப்பொத்தானை வடக்கு, கல்மிட்டியாவ தெற்கு ஆகிய கிராமங்கள் நன்மை அடைய உள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
மக்கள் நலன்சார் அமைப்புக்களினதும், சேவை நாடிகளினதும் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் இப்பிரதேச மக்கள் இத்திட்டத்தின் மூலம் உடல் நலத்துடன் கூடிய வளமான வாழ்வை நோக்கி பயணிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்..

0 Comments